Advertisment

ஐ.பி.எல். போட்டியில் செருப்பை பயன்படுத்தலாம்: செந்தில் பாலாஜி யோசனை

V.Senthilbalaji

Advertisment

அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினரின் எதிர்ப்பை மீறி சென்னை யில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. போட்டியின்போது மைதானத்தில் எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக ரசிகர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொடிகள், பேனர்கள், செல்போன், லேப்டாப், கேமரா, பட்டாசுகள், ஊதுகுழல்கள், தண்ணீர் பாட்டில் உட்பட எதையுமே உள்ளே எடுத்துச் செல்லக் கூடாது என்று மைதான நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அனுமதி டிக்கெட் தவிர வேறு எதுவுமே ரசிகர்களிடம் இருக்கக் கூடாது என்று போலீஸாரும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில், ஐ.பி.எல். போட்டிக்கு செருப்புகள் அணிந்து வருவதற்கு தடையில்லை. பயன்படுத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Comment IPL senthilbalaji twitter
இதையும் படியுங்கள்
Subscribe