Skip to main content

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் ஏலம் இன்று தொடக்கம்!

இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் டி20 தொடரின் 13ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.  அதில் பங்கேற்கும் வீரர்களின் ஏலம் இன்று கொல்கத்தாவில் நடைபெறவிருக்கிறது. இந்த ஏலத்தில் 186 வெளிநாட்டு வீரர்கள், 143 உள்நட்டு வீரர்கள் என மொத்தம் 332 பேர் இறுதிகட்ட பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

 

ipl-2019-auction

 

இதில் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹசில்வுட், கிறிஸ் லின், கிளென் மேக்ஸ்வெல், டெலே ஸ்டெயின், மேத்யூஸ் ஆகியோரின் அடிப்படை ஏலத் தொகை ரூ.2 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போல்  ஈயோன் மோர்கன், ஜேசன் ராய், கிறிஸ் மோரிஸ், கிறிஸ் வோக்ஸ், ஆடம் ஜாம்பா, ஷான் மார்ஷ், டேவிட் வில்லி, கைல் அபோட், கேன் ரிச்சர்ட்சன், இந்திய அணியைச் சேர்ந்த ராபின் உத்தப்பா ஆகியோரின் அடிப்படை ஏலத்தொகை ரூ.1.5 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்