Advertisment

தமிழகத்தில் கொள்ளைக்கார ஆட்சி நடக்கிறது!  ஐ.பி.குற்றச்சாட்டு!!

i

Advertisment

அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வர இருப்பதால் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தலுக்கான பணிகள் அசுர வேகத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் தான் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கான ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் கழகத் துணை பொதுச் செயலாளருமான பெரியசாமி தலைமை தாங்கினார். இதில், மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நகர ஒன்றிய பேரூர் கழக பொறுப்பாளர்கள் , சார்பு அணியை சேர்ந்த பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், கழகப் பொதுச் செயலாளருமான ஐ பெரியசாமியோ... வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கக்கூடிய பொறுப்பாளர்கள் தாங்கள்தான் வேட்பாளர்கள் என நினைத்து நினைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும். அப்படி பணியாற்றினால்தான் நாம் வெற்றி பெற முடியும். வெற்றியும் பெறுவோம் அதுபோல் இடைத்தேர்தல் நடக்கக்கூடிய நிலக்கோட்டை தொகுதியில் உள்ள நிர்வாகிகளும் தேர்தல் பணியில் பம்பரமாக செயல் படவேண்டும்.

Advertisment

i

இப்படி பாராளுமன்ற தேர்தலிலும் இடைத்தேர்தலிலும் பணியாற்றினால்தான் இரண்டு தொகுதிகளையும் கைப்பற்ற முடியும். தமிழகத்தில் கொள்ளக்கார ஆட்சி நடக்கிறது. அதில் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும். அது திமுக தான் முடியும் அதனால் வரக்கூடிய தேர்தலில் கட்சிப் பொறுப்பாளர்கள் தொண்டர்களை அரவணைத்துச் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.

இக்கூட்டத்திற்கு மாநில இளைஞரணி செயலாளர் சாமிநாதன் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான சக்கரபாணியும், கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமாரும் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான நிர்வாகிகளும் தொண்டர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

i periyasamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe