
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு பழனி அருகே உள்ள ஆய்க் குடியில் கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நடந்த பரி சளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பழனி எம்.எல்.ஏ. ஐ.பி செந்தில்குமார் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.
அதன் பின் எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில் குமார் பேசும்போது, இந்திய அரசியலைப்பின் அடிப்படை தெரியாமல் பேசுபவர்களுக்கு பதில் சொல்ல முடியாது. பிறப்பால் மட்டும் யாரும் தங்களது தகுதியை உயர்த்திக் கொள்ள முடியாது. ஒருவருடைய உழைப்பு மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றிய விதம், மக்களிடம் கிடைக்கும் வரவேற்பு ஆகியவை மூலமாக மக்கள் கொடுக்கும் அங்கீகாரமே சட்டமன்ற உறுப்பினர் பதவி, அமைச்சர் துணை முதல்வர் மற்றும் முதல்வர் பதவி என்பது கூட தெரியாதவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொள்வதில் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக த.வெ.க.தலைவர் விஜய் தெரிவித்திருப்பது கூட்டணியில் குழப்பம் செய்யும் வேலை என்று அன்றைய தினம் அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றதாக திருமாவளவனே தெளிவாக கூறியுள்ளார் விஜய் குறித்த கேள்விக்கு சினிமா செய்திகளை நான் பார்ப்பதில்லை என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பது சரியானது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை களத்துக்கு சென்று சந்திக்காமல் வீட்டுக்கு வரவழைத்து சந்தித்ததின் அர்த்தம் என்ன என்பதை விஜய் முதலில் விளக்க வேண்டும்” என்று கூறினார்.