
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அழைத்து அவமதிப்பதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் துணைவேந்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் 29வது பட்டமளிப்பு விழா ஜவஹர்லால் நேரு அரங்கில் நடைபெற்றது. இதில் ஆளுநர், துணைகுடியரசுத் தலைவர், முதலமைச்சர் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொள்ள வரவில்லை. அதனைத் தொடர்ந்து ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால் மட்டுமே பட்டங்களை வழங்கினார். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து அவமதிப்பதாக பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் மேடையிலேயே துணைவேந்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்திய பிறகு பட்டமளிப்பு விழா எனது தொடங்கியது.பாஜக எம்எல்ஏ துணைவேந்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)