Investors victimized by Namakkal Finance Company fraud can file a complaint

Advertisment

நாமக்கல் அருகே, சோமசுந்தரம் செட்டியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த முதலீட்டாளர்கள் பொருளாதாரக் குற்றப்பிரிவுகாவல்துறையில் புகார் அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கச்சேரி சாலை, அருளகம் பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (79). இவருடைய மனைவி செல்லம்மை (75). இவர்களுடைய மகன் அருணாச்சலம் (45), மருமகள் சொர்ணமாலா (38), மகள்கள் காந்திமதி (54), வள்ளியம்மை (50) ஆகியோர்,வீட்டிலேயே ‘சோமசுந்தரம் செட்டியார்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் இரட்டிப்பு மடங்காகப் பணத்தைத்திருப்பி வழங்குவதாக கவர்ச்சிகரமான அறிவிப்பைவெளியிட்டனர். இதை நம்பி ஏராளமானோர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் முதலீட்டாளர்களுக்கு குறித்த காலத்தில் அசல், வட்டித்தொகை திருப்பித் தரப்படவில்லை. இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட அதே ஊரைச் சேர்ந்த சரவணன் மனைவி துர்காதேவி (43) நாமக்கல் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதேபோல மேலும் 11 முதலீட்டாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

Advertisment

அதன்பேரில் சோமசுந்தரம் செட்டியார் நிதி நிறுவன உரிமையாளர்கள் மீது மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து,‘இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட நபர்கள், நாமக்கல் -சேலம் சாலையில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை நேரில் புகார் அளிக்கலாம். புகார் அளிக்க வேண்டிய அலைப்பேசி எண்: 9865570896’ எனப்பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.