வரும் ஜூலை 4 ஆம் தேதி முதலீட்டாளர் சந்திப்பு நடைபெறஇருப்பதாகதமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இன்று சென்னைதலைமைச்செயலகத்தில்செய்தியாளர்களைசந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ''தொழில் முதலீடுகளை ஈர்ப்பதோடுஅரசு நின்றுவிடாமல் தொழில் நிறுவனங்களோடு கலந்துரையாடி பல்வேறு திட்டங்களை அவர்கள் நிறைவேற்றுவதற்கு உரிய முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்கிறோம். உயர்தொழில்நுட்பநிறுவனங்கள் கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் அமைய இருக்கிறது. இந்த ஓராண்டில் மட்டும் பலதுறைகளில்முதலீடுகளை ஈர்த்துள்ளோம். செமிகண்டக்டர்கள், மின் வாகனங்கள்,லித்தியம்அயர்ன்பேட்டரிகள், சூரிய ஒளிமின்னழுத்திகள்,சோலார்போட்டோவோல்டிக்உற்பத்தி ஆகியவை புதிய துறைகளாகஉருவாகி வந்துள்ளது. இந்த துறைகளில் தமிழ்நாட்டில்தொழில்முதலீடுசெய்வதற்கு பல்வேறு தொழில் நிறுவனங்கள் பெரும்ஆர்வத்தைக்காட்டிவருகிறார்கள். கடந்த ஓராண்டில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகிடைத்துள்ளது'' என்றார்