v

திரைக்கு வந்த குறுகிய காலத்தில் அதிக படங்களில் நடித்து அசுர வேகத்தில் முன்னணி நடிகராக வளர்ச்சி பெற்ற நடிகர் விஜய் சேதுபதி கடந்த காலங்களில் வரி ஏய்ப்பு செய்ததாகவும், அதன் அடிப்படையில் சென்னை கீழப்பாக்கத்தில் உள்ள அவரது வீடு, வளசரவாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு சோதனை நடத்த வருமான வரித்துறையினர் சென்றதாகவும் விஜய் சேதுபதி வெளியூரில் இருப்பதால் வீட்டில் சோதனை நடத்தாமல் திரும்பி வந்துவிட்டதாகவும், அலுவலகத்தில் ஊழியர்களிடம் மட்டும் விசாரணை நடத்திவிட்டு, சில ஆவணங்களுடன் சென்றுவிட்டதாகவும் வருமான வரித்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

Advertisment

விஜய்சேதுபதி வந்ததும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் வருமான வரித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

Advertisment

ஆனால், விஜய்சேதுபதி தரப்பினரோ, இது வருமான வரித்துறைஆய்வுக்குழுவின் வழக்கமான சோதனைதானே தவிர, வரி ஏய்ப்பு செய்ததற்கான சோதனையும் இல்லை. அதற்கான விசாரணையும் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.