Advertisment

மொழிபெயர்ப்பாளர்கள் உதவியுடன் விசாரணை... கொடநாடு வழக்கில் அதிரடி!

 Investigation with the help of translators ... Action in Kodanadu case!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடுஎஸ்டேட்டில்கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில், ஓம்பகதூர்என்ற பாதுகாவலர் கொலை செய்யப்பட்டு, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக நீலகிரி மாவட்ட காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிசாரணை நடந்துவருகிறது. அதேபோன்று இந்த வழக்கு சம்பந்தமாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, சாட்சிகளிடம் போலீசார்தொடர் விசாரணையில் ஈடுபட்டுவருகிறார்கள்.அதேபோல் குற்றம்சாட்டப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.

Advertisment

இந்த வழக்கில் 8வதுநபராகச்சேர்க்கப்பட்டுள்ள சந்தோஷ் சாமி, 9வதுநபராகச்சேர்க்கப்பட்டுள்ள மனோஜ் என்கிற சாமி ஆகியோர் நேற்று (22.09.2021) உதகை பழைய காவல் கண்காணிப்பாளர்அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். இவர்கள் இருவரும் கோவில் பூசாரிகள் என்ற நிலையில், கொடநாடு கொள்ளை சம்பவத்தை நிகழ்த்த சில தடைகள் இருப்பதாகவும், அதற்கு சில பூஜைகள் செய்ய வேண்டும் எனக் கூறியதாகவும் கூறப்படுகிறது. சொன்னபடியே சில பூஜைகள் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்தக் கொள்ளை வழக்கில்வாகனங்கள் மற்றும்ஆட்களை ஏற்பாடு செய்தது, அதேபோல்கொள்ளை சம்பவம் நடைபெற்ற 2017 ஏப்ரல் மாதம் 23ஆம் தேதிக்கு ஒருநாள் முன்பு இருவரும்கோவை வந்துள்ளனர். கொடநாடு கொள்ளை வழக்கில்கொடநாடு எஸ்டேட்டின்8வதுஎண்நுழைவுகேட்டில் இருந்த காவலாளிகிருஷ்ணதபாவைகட்டிப்போட்டுக்கண்காணித்த 4 பேரில் இவர்கள் இருவரும் இருந்ததாகவும்குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் இருவரிடமும் நேற்று சுமார் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

Advertisment

இந்நிலையில் இன்றும் மனோஜ் (எ) சாமி, சந்தோஷ் சாமி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். அதேபோல், குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ள சதீஷ் மற்றும் 6வது இடத்தில் உள்ள பிஜின்குட்டிஆகியோர் விசாரணைக்காக இன்றுஆஜராகியுள்ளனர். மனோஜ் (எ) சாமி, சந்தோஷ் சாமி, சதீஷ், பிஜின்குட்டி ஆகியோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் இந்த விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்தக் கொலை, கொள்ளை வழக்கில் மேலும் யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்த விசாரணையை தனிப்படை அதிரடியாக கையிலெடுத்துள்ளது.

police Kodanad Estate
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe