திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே எம்.ஆர். பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாய சங்கத் தலைவர் சண்முக சுந்தரம்(60). இவர் கடந்த30 ஆம் தேதி அதிகாலை வீட்டில் தனியாக இருந்தபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவரும் நிலையில், நேற்று லால்குடியைச் சேர்ந்த 18 வயது சிறுவன் ஒருவர் திருச்சி சிறுவர் சீர்திருத்த நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பஞ்சமி நிலம் தொடர்பான பிரச்சனையில் சண்முகசுந்தரம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதும், அவர் கூலிப்படையாகச் செயல்பட்டு கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது.இதையடுத்து சிறுவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் 6 பேரை பிடித்து சிறுகனூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.