Advertisment

விடிய விடிய விசாரணை... சாத்தான்குளம் அழைத்துச் செல்லப்படும் 3 காவலர்கள்!

investigation ... 3 policemen to be taken to Sathankulam!

சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதைக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்தியச் சிறையிலடைக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள்இருவர்உள்ளிட்ட5 பேரை 14ஆம் தேதியிலிருந்து 16ஆம் தேதி வரை 3 நாட்கள் சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரித்தனர்.சி.பி.ஐ. விசாரணைக்கு பிறகுஅவர்கள் அனைவரும் மீண்டும் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisment

இந்த வழக்கில்வெயில் முத்து, சாமதுரை, செல்லத்துரைஆகிய மூன்று காவலர்களைகாவலில் விசாரிக்க சி.பி.ஐ. அனுமதி கோரிய நிலையில் மூன்று நாட்கள் அனுமதி கொடுக்கப்பட்டு அவர்களிடமும் 2 நாட்களாக சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. இன்று காலை வரை விடிய விடிய விசாரணை நடைபெற்றுவந்தநிலையில் சாமதுரைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால்,அவருக்கு மதுரை ஆயுதப்படை காவலர்களுக்கானமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் சி.பி.ஐ. அலுவலகத்திற்கு அழைத்து வந்தார்கள். தற்பொழுது செல்லதுரை,சாமதுரை, வெயில் முத்து ஆகிய மூவரையும்சாத்தான்குளம் அழைத்துச் சென்றுவிசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisment

ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஐந்து காவலர்களையும் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று என்ன நடந்தது என்பதை எல்லாம் நடித்துக் காட்டச் சொல்லி வீடியோ பதிவு செய்திருந்தனர். அதேபோல் தற்போது இவர்களிடமும் அதுபோன்ற ஒரு விசாரணை நடைபெற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 5 காவலர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் கூறிய தகவலும், 3 காவலரிடம் நடத்தப்படும் விசாரணையில் அவர்கள் தெரிவிக்கும்தகவலும்ஒன்றாக உள்ளதா என்ற கோணத்திலும் சி.பி.ஐ. விசாரணை செய்து வருகிறது.

CBI incidnet Investigation sathankulam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe