Skip to main content

திருத்துறைப்பூண்டியில் 13 குளங்களில் 24 ஆக்கிரமிப்புகள்! -தாசில்தார் தாக்கல் செய்த ஆய்வறிக்கை!

Published on 14/01/2020 | Edited on 14/01/2020

திருத்துறைப்பூண்டியில் உள்ள 13 குளங்களில் 24 ஆக்கிரமிப்புகள் உள்ளதாக தாசில்தார் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளார். 

 

invasions in thiruthuraipoondi ponds

 

 

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ள 32 குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு திருவாருர் கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகப் பொறியாளர், திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிடக் கோரி, திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ஐயப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அடங்கிய அமர்வு,  இந்த ஆக்கிரமிப்பு குறித்து நேரில் ஆய்வு செய்து  அறிக்கை தாக்கல் செய்ய  திருத்துறைபூண்டி தாசில்தாருக்கு உத்தரவிட்டிருந்தது. 

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திருத்துறைப்பூண்டி தாசில்தார் ராஜன்பாபு,  குளங்கள் எல்லை மற்றும் ஆக்கிரமிப்பு விபரங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார்.  அதில் பிடாரிகுளம், அரசங்குளம் உள்ளிட்ட 13 குளங்கள் அளவிடப்பட்டு உள்ளதாகவும், அதில் 24 ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.  மீதமுள்ள 19 குளங்கள் அருகில் நஞ்சை நிலங்களில் பயிர்கள் உள்ளதால் அறுவடைக்கு பிறகு அந்தக் குளங்கள் தொடர்பான எல்லையை அளவீடு செய்து ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து, மீதமுள்ள குளங்களை அளந்து, ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தாசில்தாருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,  விசாரணையை பிப்ரவரி 3-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தலைவருக்காக உயிரையே கொடுப்பேன்” - முதல் ஆளாக ராஜினாமா செய்த திமுக நகரச் செயலாளர்! 

Published on 05/03/2022 | Edited on 05/03/2022

 

"I will give my life for the leader" - DMK city secretary who was the first to resign!

 

"கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் ராஜினாமா செய்துவிட்டு என்னை வந்து சந்திக்க வேண்டும்" என அதிரடி அறிக்கை விட்டிருந்தார் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்.

 

முதல்வர் ஸ்டாலின் உத்தரவை அடுத்து முதல் ஆளாக துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ‘தலைவர்தான் எங்களுக்கு உயிர்.. அவருக்காக உயிரையும் கொடுப்போம்’ என திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன் பேசியது சமுக வளைதளங்களில் வைரலாகிவருகிறது.

 

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் திமுக கூட்டணி 21 வார்டுகளை கைப்பற்றியது. இதில் 5வது வார்டில் போட்டியிட்ட திமுக நகர செயலாளர் ஆர்,எஸ்,பாண்டியன் அதிமுக வேட்பாளர் வேட்புமனு தள்ளுபடியானதால் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார். இந்த சூழலில் நகர்மன்றத் தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் 4ம் தேதி நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி நகராட்சியின் துணை தலைவர் பதவியை கூட்டணிக்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியது திமுக தலைமை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துணை சேர்மனுக்கான வேட்பாளராக ராமலோக ஈஸ்வரியை நிறுத்தியது.

 

"I will give my life for the leader" - DMK city secretary who was the first to resign!

 

இந்தநிலையில் 4ம் தேதி நடந்த மறைமுக தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ராமலோக ஈஸ்வரி காலையில் நடத்த தலைவருக்கான தேர்வில் கலந்துகொள்ளாததால், அதிமுகவினர் சந்தடி சாக்கில் உள்ளே புகுந்துவிட வாய்ப்பு இருப்பாதக கருதிய திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திமுக நகர செயலாளர் பாண்டியனையே துணை தலைவருக்கு பரிந்துறை செய்தனர். மாலை நடந்த மறைமுக தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்று நகராட்சியை திமுகவே தக்கவைத்தது.


இந்தநிலையில் திமுக தலைவரின் அறிவிப்பை தொடர்ந்து முதல் ஆளாக ராஜினாமா செய்திருக்கிறார் திமுக நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன். மேலும் அவர் பேசிய வீடியோவில், "நகர திமுக செயலாளராகிய நான் ஒரு கருத்தை தெரிவிக்க விரும்புகிறேன். இன்று மாலை எங்களுடைய வணக்கத்திற்குரிய தலைவர், வாழ்நாள் தலைவர், வணக்கத்திற்குரிய எங்களின் மேன்மைமிகு அண்ணன் தமிழக முதல்வர் தலைவர் தளபதி அவர்கள் ஒரு அறிக்கையை கொடுத்திருக்கிறார்கள்.

 

கூட்டணி கட்சியினருக்கு விட்டுக்கொடுத்துள்ள இடங்களில் போட்டியிடக்கூடாது என்கிற ஒரு சாராம்சத்தை சொல்லியிருக்கிறார். அதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் அவரது உத்தரவை மீறவில்லை, இன்று காலையில் நடைபெற்ற நகராட்சித் தலைவர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ராமலோக ஈஸ்வரி பங்கு பெறவில்லை. அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராமலோக ஈஸ்வரி என்பவர் நகர் மன்றத் தேர்தலில் கலந்து கொள்ளவில்லை. அந்த ஒரு காரணத்திற்காகவும், சந்தடி சாக்கில் அதிமுக புகுந்துவிடக்கூடாது என்பதாலும், இன்று மாலை நடந்த நகர்மன்றத் துணைத் தலைவர் தேர்தலுக்காக நகர செயலாளராகிய என்னை திமுக, காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட 21 உறுப்பினர்களும் என்னை போட்டி போட சொன்னார்கள். நான் அதில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டேன்.


எங்கள் தலைவருக்கு ஒரு பங்கம் என்றால் எனக்கு இந்த பதவி முக்கியமல்ல, உயிரை கூட கொடுப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் தயாராக இருக்கிறோம்.  எனவே இந்த பதவியை ராஜினாமா செய்கிறேன். இந்தகடிதத்தை தலைவரிடத்தில் வழங்குவேன், அவர் எங்கு கொடுக்க சொல்கிறாரோ, அங்கு ஒப்படைப்பேன். தலைவர் என்றால் எங்களுக்கு உயிரு, தலைவருக்காக இதனை மனபூர்வமாக செய்கிறேன்" என கூறியிருக்கிறார்.


நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியனின் இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

 

 

Next Story

பெண் வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு...!

Published on 04/03/2022 | Edited on 04/03/2022

 

Petrol bomb blast at Marxist Communist candidate's house

 

திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத் தலைவர் வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நகராட்சியில் துணைத் தலைவர் வேட்பாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராமலோக ஈஸ்வரி என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் குண்டு வீசி தங்களை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளதாக வேட்பாளர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.