Invaded Chennai residents; Deserted roads

Advertisment

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழகத்திலும்தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது. தீபாவளிபண்டிகை காரணமாக சென்னையில் இருந்துலட்சக்கணக்கானோர்சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதற்கான சிறப்புப் பேருந்து வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

கடந்த மூன்று நாட்களாக சிறப்புப் பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் இதுவரை மொத்தம் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு தீபாவளி பண்டிகைக்காக சென்றுள்ளனர். இன்று தீபாவளி பண்டிகை விடுமுறை என்ற நிலையில் நாளையும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு என இரு நாட்கள் விடுமுறை வருவதால் மொத்தமாக நான்கு நாட்கள் தீபாவளி விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் அதிகப்படியானோர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் பல்வேறு முக்கிய இடங்களில் பரபரப்பாக இருக்கும் சாலைகள் இன்று வெறிச்சோடி காணப்படுகிறது. குறிப்பாக அண்ணா சாலை பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.