Introducing 'Fastecker' processor to detect criminals ...!

Advertisment

மக்கள் பெருக்கத்துக்கு ஏற்ப குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. குற்றம் புரிவோரைக் கண்டறிய போலீஸார் பல நடவடிக்கைகளை எடுக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக ஃபேஸ்டேகர் எனும் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மாநில அளவில் இரண்டாவதாகவும், தென் மண்டலத்தில் முதலாவதாகவும் திண்டுக்கல்லில் நேற்று அறிமுகப்படுத்தி பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதில் எஸ்.பி.ரவளிப்பிரியா, ஏ.டி.எஸ்.பி. இனிகோ திவ்யன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். ரோந்து பணியில் இருக்கும் போலீசார், சந்தேகம் படும்படியான நபரை காணும்போது அவரை ஃபோட்டோ எடுத்து, இச்செயலியில் பதிவேற்றினால் போதும்; அந்த நபர் மீது தமிழகத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் வழக்குப்பதிவு செய்து இருந்தாலும் உடனே தெரிந்துவிடும். அதற்கேற்ப தரவுகளுடன் செயலி தயாராகிறது. மேலும், ஒரு குற்றவாளியை நேரடியாக ஃபோட்டோ எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரது ஏதேனும் ஒரு ஃபோட்டோவை பதிவேற்றினால் அவர்களின் தகவல்கள் கிடைக்கும். குற்றவாளி தனது அடையாளத்தை மாற்றி இருந்தாலும் அவரது கண்களை வைத்து கண்டறிய செயலி உதவும்.

Advertisment

Introducing 'Fastecker' processor to detect criminals ...!

இது சம்பந்தமாக எஸ்.பி. ரவளிபிரியா கூறுகையில், “தென் மாவட்டங்களில் நுழைவுவாயிலான திண்டுக்கல்லில் குற்றச் செயலில் ஈடுபடுவோர், இடம் மாறும்போது இம்மாவட்டத்தைக் கடந்து செல்வர். எனவே இப்பகுதியில் பிடிபடுபவரைப் பற்றி அறிய இந்த செயலி மிகவும் உதவியாக இருக்கும். இந்த செயலியை ரோந்து பணியில் இருக்கும் போலீசார் பயன்படுத்த உள்ளனர்” என்று கூறினார்.