Advertisment

'கடைவீதியில் ரகளை...'- போலீசாரிடமே எகிறிய போதை இளைஞர்கள்

Intoxicated youths who jumped at the police

Advertisment

போதை ஆசாமிகளால் கடைவீதியில் மக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே பிரதான சாலையில் இன்று மாலை 4 போதை இளைஞர்கள் மழையில் நனைந்து கொண்டே ரகளையில் ஈடுபட்டனர். அவர்களுக்குள் அடித்துக் கொண்டு அருகில் உள்ள கடைகளில் இருந்த பொருட்களை தூக்கி வீசியுள்ளனர். இதில் அந்த வழியாகச் சென்ற ஒரு மூதாட்டி காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

Intoxicated youths who jumped at the police

தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்களுக்கும் கடைகாரர்களுக்கும் இடையூறாக நின்று ரகளை செய்கிறார்கள் என்று அப்பகுதியில் நின்றவர்கள் கீரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலையடுத்து போலீசார் வந்த போது அவர்களிடமும் எகிறிய போதை இளைஞர்களை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இவர்களுக்குள் அடித்துக் கொண்டு பைக்கை தள்ளி விட்டு கடையில் இருந்த பொருட்களை தூக்கி வீசி ரொம்பவே ரகளை செய்தனர். இவர்களை கேட்கப் போனவர்களையும் தாக்க முயன்றனர். அதன் பிறகு போலீசார் வந்தும் அவர்களிடமும் எகிறினார்கள். இவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதியில் நின்றவர்கள்.

Keeramangalam police Pudukottai TASMAC
இதையும் படியுங்கள்
Subscribe