Advertisment

ஊர்காவல் படையினர் மீது போதை இளைஞர்கள் தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Intoxicated youth attack policemen; A viral video

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் போதை இளைஞர்கள் இருவர் பொது இடத்தில் ஊர்காவல் படையினருடன் சண்டையிட்டு மோதிக் கொள்ளும் பரபரப்பு காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த சகோதரர்கள் விஜயன்-தாமரைக் கண்ணன். இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது அண்ணாசிலை அருகே கூட்டம் அதிகமாக இருந்ததால் திடீரென பிரேக் அடித்தனர். இதில் இருவரும் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து வழுக்கி விழுந்தனர்.

Advertisment

அப்போது அங்குப் பாதுகாப்பது பணியிலிருந்த ஊர்காவலர் படையினர் இருவரையும் விசாரிக்க வேண்டும் என அழைத்தனர். விசாரணையில் இருவரும் போதையிலிருந்தது தெரிந்தது. ஊர்காவல் படையினருடன் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் கூட்டம் கூடியது. இருப்பினும் விடாத சகோதரர்கள் இருவரும் ஊர்காவல் படையினரிடம் தொடர்ந்து கண்மூடித்தனமாகத் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

THIRUCHENGODE namakkal police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe