
கோவை அருகே மகனுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்து விட்டு திரும்பிய குடும்பத்தினர் லாரி மோதி விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தலைநிற்காத போதையில் இருந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கோவையைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ்-ராஜம்மாள் தம்பதியினர். இவர்கள் அவர்களது மகனுக்கு பெண் பார்ப்பதற்காக கடந்த ஞாயிற்று கிழமை ஆம்னி வேனில் உறவினர்களுடன் வடுகபாளையம் சென்றுள்ளனர். பின்னர் வீடு திரும்புகையில் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே வண்டியை நிறுத்தியுள்ளனர். அப்பொழுது எதிரே வந்த சரக்கு வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் சென்ற ஆம்னி மீது மோதியது. இந்த விபத்தில் ராஜாம்மாள் மற்றும் அவரது உறவினர் செல்வி ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று விபத்தை ஏற்படுத்திய சரக்கு லாரி ஓட்டுநர் பட்டீஸ்வரன் தலைநிற்காத போதையில் இருந்துள்ளார். ஓட்டுநரை பிடித்த அக்கம் பக்கத்தினர் இப்படி நிற்கமுடியாத போதையில் ஏன் வாகனத்தை ஒட்டினாய் என்று அடித்து உதைத்தனர். அருகிலேயே பெண்கள் இருவர் இறந்து கிடக்க, ஓட்டுநர் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில்தற்பொழுது வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)