An intoxicated person who urinated in a frowning manner; Tirupur bus station is full of drunkards

Advertisment

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மது போதையில் பேருந்து நிலையத்திற்கு வந்த ஒருவர், கடையில் உள் வாடகை பிரச்சனை தொடர்பாக ரகளையில் ஈடுபட்டார். அப்போது பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த பயணிகளுக்கு மத்தியில் போதையில் சண்டை போட்டுக் கொள்ளும் அந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து அந்த போதை ஆசாமி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அமர்வதற்காக வைத்திருந்த இரும்பு நாற்காலியை கீழே தள்ளிவிட்டு பிரச்சனை செய்தார்.

அங்கிருந்த கடைக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த போதை ஆசாமி, அனைவரும் முகம் சுளிக்கும் வகையில் அந்த இடத்திலேயே சிறுநீர் கழித்தார். பின்னர் அதிலேயே படுத்துக்கொண்டார். திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இதுபோன்ற போதை ஆசாமிகளின் அட்டூழியங்கள் தொடர்ந்து நீடித்து வருவதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அண்மையில் ஈரோட்டில் இதேபோல மது போதையில் இளைஞன் ஒருவன் பெண்கள் கழிவறையில் எட்டிப் பார்த்தது தொடர்பாகப் பெண் ஒருவர் மிளகாய்ப் பொடி வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பைஏற்படுத்திய நிலையில், திருப்பூர் பேருந்து நிலையத்தில் இப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.