Advertisment

டீ கிளாஸை உடைத்த இளைஞர்கள்; கஞ்சா போதையில் காசு கொடுக்காமல் அலப்பறை!

Intoxicated with cannabis youth broke a tea glass and  without paying money

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் இரவு நேரங்களில் தேநீர்க்கடைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் சனிக்கிழமை இரவு செயல்பட்டு வந்த ஒரு தேநீர்க்கடைக்கு இரண்டு இளைஞர்கள் கஞ்சா போதையில் வந்தனர். அப்பொழுது டி-ஷர்ட் அணிந்திருந்த இளைஞர் காசு கொடுக்காமல் இஞ்சி டீ கொடுக்குமாறு கேட்டு முதலில் தகராறு செய்துள்ளார். அதன் பின் கடையில் இருந்த டீ மாஸ்டர் காசு வாங்காமலேயே இஞ்சி டீ போட்டுக் கொடுத்தபோது அதனை வாங்கிய கஞ்சா ஆசாமி கண்ணாடி கிளாசில் இருந்த டீயுடன் சேர்த்து கீழே போட்டு உடைத்து அங்கு இருந்தவர்களிடம் தகராறு செய்துள்ளார்.

Advertisment

அதேபோல் அவருடன் வந்த இளைஞர் காசு கொடுக்காமல் தான் வாங்கி வந்த பூஸ்ட் பாக்கெட்டை டீ மாஸ்டரிடம் கொடுத்து பூஸ்ட் பால் போட்டுக் கொடுக்குமாறு கேட்டு தகராறு செய்திருக்கிறார். பணம் கொடுக்காமல் இரண்டு இளைஞர்களும் டீ, பூஸ்ட் கேட்டு டீ மாஸ்டரிடம் தகராறு செய்த நிலையில் காசு வாங்காமல் இருவருக்கும் இஞ்சி டீ மற்றும் பூஸ்ட் போட்டுக் கொடுத்த பின்பும் டீ கிளாஸை உடைத்து அங்கு இருந்தவர்களிடம் தகராறு செய்துள்ளனர்.

Advertisment

இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தகராறு செய்த இரு இளைஞர்களும் தினசரி இரவு நேரத்தில் கஞ்சா போதையில் வந்து டீ கடையில் தகராறு செய்ததோடு அங்கு இருப்பவர்களிடம் சண்டையிட்டு செல்வதாகக் கடையில் இருந்தவர்கள் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து உடனடியாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இரண்டு இளைஞர்களும் போதையில் இருப்பதால், அவர்கள் மறுநாள் வரும்போது தகவல் தெரிவித்தால் உடனடியாக வந்து அவர்களைப் பிடித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Cannabis kallakurichi police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe