தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நேற்று முன்தினம் (27.02.2021) நடிகர் சரத்குமார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்தார். இந்தச்சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தசரத்குமார், 'வரும் சட்டமன்ற தேர்தலில்சமக உடனும், ஐ.ஜே.கேஉடனும்மக்கள் நீதி மய்யம்கூட்டணி அமைத்துக்கொள்வது குறித்துப்பேசப்பட்டதாகவும்,கமல் ஒரு நல்ல முடிவைத் தெரிவிப்பார்'என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஐ.ஜே.கே மற்றும் சமகவுடன் கூட்டணி மற்றும் வேட்பாளர்கள் தேர்வு குறித்துஆலோசனை நடத்ததிட்டமிட்டு, நேற்றுஅவசர நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டம்கூட்டப்பட்டது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம்வேட்பாளர்களுக்கான நேர்காணல், தற்பொழுது சென்னையில் உள்ள மக்கள் நீதி மய்யம்கட்சி அலுவலகத்தில் தொடங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தபழ.கருப்பையாமற்றும் மக்கள் நீதி மய்யம்தலைவர்கமல் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்த நேர்காணல் நடைபெற்று வருகிறது.