சசிகலா என்றவுடன் பேட்டியை முடித்துக்கொண்ட தம்பிதுரை

பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்,
கரூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆட்சி நிலையானது. இன்னும் 4 ஆண்டுகள் மட்டுமல்லாமல் ஜெயலலிதா கூறியது போன்று நூறாண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்யும். இது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.
அ.தி.மு.க. எனும் இந்த இயக்கத்தை அழிக்க இது வரை யாரும் பிறக்கவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இந்த ஆட்சியை நமக்கு தந்துவிட்டு சென்றிருக்கிறார். ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.
ஆனால் இந்த ஆட்சியை கலைக்க முடியவில்லையே. கவிழ்க்க முடியவில்லையே என்ற விரக்தியில் எதிர்க் கட்சியினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அது நடக்காது. நாங்கள் நல்லதையே நினைக்கிறோம், நல்லதே நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து சசிகலா பரோலில் வந்தால் அ.தி.மு. க.வை ஒருங்கிணைப்பது தொடர்பாக அவருடன் பேசுவீர்களா? என்ற கேள்விக்கு, பதில் எதுவும் கூறாமல் சென்று விட்டார்.