publive-image

Advertisment

கரூரில் உள்ள ஜெய்ராம் கலை & அறிவியல் கல்லூரியில் நேற்று (02/01/2022) காலை 11.00 மணிக்கு அரசியல் களப்பணியாற்றுவதற்கான பயிற்சி பட்டறைத் துவக்க விழா நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சசிகாந்த் செந்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் சிரிவெல்ல பிரசாத், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் டேட்டா பகுப்பாய்வு பிரிவு சேர்மன் பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

publive-image

இது குறித்து ஜோதிமணி எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அரசியல், நாடாளுமன்ற, களப்பணியில் வாய்ப்பளிக்க நாங்கள் துவங்கியுள்ள 'LINC' இன்டர்ன்ஷிப் முதல் நிகழ்வு மிகச்சிறப்பாக இன்று (02/01/2022) நடந்தேறியது. உண்மையிலேயே ஓர் அற்புதமான துவக்கம். மாணவர்களின் உணர்வுப்பூர்வமான ஈடுபாடு மிகுந்த மகிழ்ச்சியும், ஊக்கமும் அளிக்கிறது. அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

Advertisment

publive-image

இந்த இன்டர்ன்ஷிப்புக்கு பெயர் வைப்பது, லோகோ வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை குறுகிய காலத்தில் மிகச்சிறப்பாக செய்துமுடித்த தீபனுக்கு மனமார்ந்த நன்றிகள்.

tweets

Advertisment

இந்த இன்டர்ன்ஷிப் எனது நெடுங்காலக் கனவு. ஆனால் இதை இவ்வளவு சிறப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது ஒரு கூட்டு முயற்சி. இன்றைய சிறப்பான துவக்கம் இந்த கூட்டு முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.