சென்னை நந்தனத்தில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் நடிகை தன்ஷிகா மற்றும் பலர் கலந்துகொண்டுயோகாவில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், பல்வேறு கல்விபணிகளை தமிழகத்தில் இன்று நிறைவேற்றி வருகிறார்கள். அதனடிப்படையில் இன்று உலகம் முழுவதும் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அனைவரும் பயிற்சியின் மூலமாக தங்களை மேம்படுத்த வேண்டும்.வாழ்க்கையில் இன்று பயத்தோடு இருக்கின்ற மாணவர்கள் தைரியத்தோடு செயலாற்றஉதவும். அதேபோல் உடல் வலிமையும் உள்ள வலிமையோடும் உடல் ஆரோக்கியத்தையும் பெறவேண்டும். இந்த யோகா பயிற்சி அளிப்பதன் மூலமாக மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இது பெரிய உதவியாக இருக்கிறது.

அதே நேரத்தில் மாணவர்களாக இருக்கின்றவர்களின்அறிவுத் திறமையை மேலும் மேலும் வலுப்படுத்துவதற்கு யோகா பயிற்சி மேற்கொள்வது நல்லது என கூறினார்.
  
 Follow Us