சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் பெண்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெண்களை மதித்து நடக்க ஆண்களுக்கு கற்றுக் கொடுத்தால் தான் சமநீதி, சம உரிமை சாத்தியப்படும். தினசரி சவால்களை தகர்த்தெறிகின்ற வீரப்பெண்மணிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள். பாதுகாப்பு சமஉரிமை என்ற முழக்கத்தோடு பெண்களுக்கு பாரபட்சமின்றி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்." இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.