/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/womens-day-art.jpg)
திருச்சியில் சர்வதேச மகளிர் தினம் 2023 இன் ஒரு வாரக் கொண்டாட்டங்களை லலிதா நர்சிங் ஹோம், சியாமளா நர்சிங் ஹோம் மற்றும் ஜனனி கருத்தரிப்பு மையம் ஆகியவற்றின் நிறுவனரும், மகளிர் மருத்துவ நிபுணருமானடாக்டர் எஸ்.சித்ரா தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு மகளிர் தின விழாவை டாக்டர் எஸ்.வேல்மதி தலைமையில் திருச்சி என்ஐடி மகளிர் பிரிவு ஒருங்கிணைக்கிறது. தொடக்க விழாவிற்கு ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய பார்வையாளர்களை வரவேற்றார்.
என்.ஐ.டி. இயக்குனர் டாக்டர் ஜி.அகிலா விழாவிற்கு தலைமை தாங்கி உரையாற்றுகையில், 2023 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தின் குறிக்கோளான பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம் என்றகருப்பொருளை தொடர்ச்சியாகவாழ்நாள் முழுவதும் கற்றல் மூலமும் அதிகாரம் பெறுவதன் மூலமும் பெண்கள் அடையலாம் என்பதை வலியுறுத்தினார்.
டாக்டர் எஸ்.சித்ரா வார விழாவைத் தொடங்கி வைத்து, 'பெண்கள்: ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு' என்ற தலைப்பில் விரிவுரை ஆற்றினார். அவரது அமர்வில், பெண்கள் தங்களை முதன்மைப்படுத்தி, அவர்களின் உணர்ச்சி, உளவியல் மற்றும் உடல் நலனைக் கவனிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி விரிவாகப் பேசினார். மேலும், பெண்கள் தங்கள் வாழ்க்கை முறைகளில் உடனடியாக மாற்றங்களைச் செய்து கொள்வதற்கு, உடல் கொடுக்கும் அறிகுறிகளைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பதற்கும் அவர் காரணங்களை விளக்கினார். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய பின் சீரான இடைவெளியில் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதன் அவசியத்தையும் உடல் மாற்றங்களை நெருக்கமாகக் கண்காணிப்பதன் அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டினார். ஒருவரின் ஆர்வத்தைப் பின்பற்றுவதற்கான நேரத்தைக் கண்டுபிடிப்பதன் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார் மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தை சமநிலைப்படுத்துவதில் உணர்ச்சி எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறதுஎன்பதை விளக்கினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)