Advertisment

சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலை போட்டி;  வீரர்களுக்கு பரிசளிப்பு!

 International Manchuria Kung Fu Martial Arts Competition; Prizes awarded to players!

பல்லவப் பேரரசின் தலைநகரமாகத் திகழ்ந்த காஞ்சியில் பிறந்த புத்தமதத் துறவி தற்காப்புக் கலையின் சகாப்த நாயகன் போதிதர்மர். சீனம் சென்று தற்காப்புக் கலை கோயில் ஷாவ்லின் டெம்பிள் உருவாக்கி புத்தனின் தத்துவங்கள் & தற்காப்புக் கலை வர்மம் மருத்துவம் உள்ளிட்ட கலைகளை பயிற்றுவித்தார்.

Advertisment

பாரம்பரிய போர்க்கலையான தற்காப்புக் கலையை சீன நாட்டின் நெற்களஞ்சியம் மஞ்சூரியா பகுதியைச் சேர்ந்த புத்தமதத் துறவி கிராண்ட் மாஸ்டர் வோங் குங்ஃபூ தற்காப்புக் கலையை 1864 ஆம் ஆண்டு பயின்று உலகம் முழுவதும் சென்று பயிற்றுவித்தார். மாஸ்டர் வோங் மஞ்சூரியா பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலை பெயர் காரணமானது.

Advertisment

கிராண்ட் மாஸ்டர் வோங் அமெரிக்கா நாட்டின் சான் பிரான்சிஸ்கோ நகரில் பயிற்றுவித்த காலகட்டத்தில் பலர் இக்கலையை பயின்றனர். பின்னர் கிராண்ட்மாஸ்டர் வோங் அவர்கள் சீன கட்டுப்பாட்டில் இருந்த ஆங்காங் நாட்டிற்கு வந்து மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையை பயிற்று வித்தார்.

கிராண்ட் மாஸ்டர் கே ஏ லீ பயின்று பின்னர் அவர் பணி நிமித்தமாக சென்னை வந்து தங்கி இருந்த காலகட்டத்தில் இக்கலையை தேனாம்பேட்டையைச் சேர்ந்த இராஜசேகர் என்கின்ற எங்கள் கிராண்ட்மாஸ்டர் ஹிங் ஷிஃபூ ஆர் சேகர் பயின்றார்.

விதியின் எழுத்தை கிழிச்சாச்சு முன்பு விட்ட குறை வந்து தொட்டாச்சு என்பதைப் போன்று பாரம்பரிய குங்ஃபூ தற்காப்புக் கலையை வீரத்தின் விளை நிலமாம் போதிதர்மரும் மாமல்லர்களும் உலவிய பல்லவப் பேரரசின் துறைமுகப் பட்டினமான புகழ்வாய்ந்த மாமல்லபுரத்திற்கு வந்து மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையை எங்களுக்கு பயிற்றுவித்தார்.

பின்னர் மாமல்லபுரம் அடுத்த ஏழாவது மையில் வட கடம்பாடியில் இடம் வாங்கி தற்காப்புக் கலை குருகுலம் அமைத்து இந்திய மாநிலங்கள் கடந்து உலகம் முழுவதிலும் இருந்து வீரர் வீராங்கனைகள் வருகை தந்து மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையை குருகுலத்தில் தங்கி பயிற்சி பெற்று இன்று உலகம் முழுவதும் இக்கலையை பயிற்றுவித்து வருகின்றனர்

வலிகள் இல்லாமல் வெற்றிகள் இல்லை என்பது எங்கள் கிராண்ட்மாஸ்டர் ஹிங் ஷிஃபூ ஆர் சேகர் எங்களுக்கு போதித்தது வெல்ல முடியாத பெருவீரனாக வார்த்தைகளால் அல்ல வாழ்ந்து காட்டியவர். ஆள்காட்டி விரலால் ஏழு ஒடுகளை உடைத்து சாதனை படைத்தார் இதை அறிந்த பிரிட்டன் நாட்டின் புகழ் பெற்ற பிபிசி தொலைக்காட்சி நெறியாளர் ஜோல் ஷார்டர் மாமல்லபுரம் வந்து அதை பதிவு செய்து உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தார். பின்னர் பிரான்சு நாட்டின் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி கிராண்ட் மாஸ்டர் ஹிங் ஷிஃபூ ஆர் சேகர் அவர்களை பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்து பதிவு செய்து ஒளிபரப்பு செய்தது.

தற்காப்புக் கலைத் திருவிழா

2014 ஆம் ஆண்டு அக்டோபர் 29 அன்று அவரின் திடீர் மறைவு எங்களை நிலைகுலைய வைத்து விட்டது. பின்னர் அவரிடம் பயிற்சி பெற்றவர்கள் ஒன்று கூடி எங்கள் கிராண்ட்மாஸ்டர் ஹிங் ஷிஃபூ ஆர் சேகர் அவர்களின் கனவை வென்றெடுக்க களமாடி வருகின்றோம். அதன் தொடர்ச்சியாகத்தான் 2025 மே மாதம் இரண்டு நாட்கள் சென்னை விஐடி பொறியியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி ஆடிட்டோரியத்தில் (மேலைக் கோட்டையூர் செங்கல்பட்டு மாவட்டம்) நடைபெற்றதற்காப்புக் கலைத் திருவிழா தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளை மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலை ஒருங்கிணைத்தது.

தேசிய அளவிலான தற்காப்புக் கலை போட்டியில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டியில் குங்ஃபூ, கராத்தே, டெக்வான்டோ குத்துச்சண்டை ரஸ்லிங் உடற்கட்டு (ஆண் அழகன்) யோகா, பரதம் உள்ளிட்ட கலைகளின் சிறந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்கும் சிறந்த வீரர்களுக்கு வெற்றிக் கோப்பை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தற்காப்புக் கலையை ஊக்குவிக்கும் நிறுவனங்கள் சார்பில் சைக்கிள், வண்ணத் தொலைக்காட்சி, காலனி, கண்ணாடி, பனியன், டி சர்ட், புளுடூத், இசைக் கருவி, பிளாஸ்க் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்வினை ஷி ஷிஃபூ மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலை அகாடமியின் தலைவர் மல்லை சி ஏ சத்யா ஒருங்கிணைத்தார்.

physicalfitness Mallai sathya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe