International Flower Auction Center cm palanisamy

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் ரூபாய் 20.20 கோடியில் அமைய உள்ள பன்னாட்டு மலர் ஏல மையத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினர்.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, முன்னாள் மக்களவை சபாநாயகர் டாக்டர். மு.தம்பிதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.ராஜேந்திரன், என்.மனோரஞ்சிதம், வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisment

அதன் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்ட வளர்ச்சிப் பணிகள், தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.