Advertisment

தகவல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் குறித்த சர்வதேச கருத்தரங்கம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்திலுள்ள கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் சார்பில் சர்வதேச கருத்தரங்கம் கணக்கீடு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் எனும் தலைப்பில் இருநாட்கள் நடைபெற்றது.

Advertisment

international conference

இவ்விழாவில் முதல்வர் ரகுகாந்தன் கருத்தரங்கத்திற்கு தலைமை தாங்கினார். கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் தலைவர் அருணா வரவேற்புரையாற்றினார். பல்கலைக்கழக பதிவாளர்(பொ) கிருஷ்ணமோகன் கருத்தரங்கை துவக்கி வைத்தார்.

Advertisment

பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய அவர் இக்கல்வியாண்டில் அறிமுகப்படுத்தபட்ட B.E.-CSE [Artificial Intelligence & Machine Learning] மற்றும் B.E.-CSE [Big Data Analytics] ஆகிய படிப்புகளின் சிறப்பம்சங்கள் மற்றும் எதிர்காலத்தில் இதன் பயன்பாடு குறித்தும் மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.

இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக மலேசியாவிலுள்ள மல்டிமீடியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையின் பேராசிரியர் சரவணன்முத்தையா கலந்து கொண்டு, கணினிப்பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப வளர்சிகளையும், புதிய மென்பொருட்களின் பயன்பாட்டினையும் செயற்கை நுண்ணறிவுப் பெற்ற இயந்திரங்களை உருவாக்கும் முறையையும் அதன் தேவைகளையும் விரிவாக விளக்கினார்.

இந்த கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன. சிறந்த கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு, விவாதம் மற்றும் கலந்துரையாடல் நடத்தினார்கள். கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர்கள் சுதாகர் கருத்தரங்கின் நோக்கங்களை எடுத்துரைத்தார். முனைவர் பிரபாகரன் நன்றி கூறினார்.

Annamalai University Conference
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe