Skip to main content

தகவல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் குறித்த சர்வதேச கருத்தரங்கம்.

Published on 26/09/2019 | Edited on 26/09/2019

அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்திலுள்ள  கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் சார்பில் சர்வதேச கருத்தரங்கம் கணக்கீடு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் எனும் தலைப்பில் இருநாட்கள் நடைபெற்றது.

international conference

 

இவ்விழாவில் முதல்வர் ரகுகாந்தன் கருத்தரங்கத்திற்கு தலைமை தாங்கினார். கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் தலைவர் அருணா வரவேற்புரையாற்றினார். பல்கலைக்கழக பதிவாளர்(பொ) கிருஷ்ணமோகன் கருத்தரங்கை துவக்கி வைத்தார். 

பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய அவர் இக்கல்வியாண்டில் அறிமுகப்படுத்தபட்ட B.E.-CSE [Artificial Intelligence & Machine Learning] மற்றும் B.E.-CSE [Big Data Analytics] ஆகிய படிப்புகளின் சிறப்பம்சங்கள் மற்றும் எதிர்காலத்தில் இதன் பயன்பாடு குறித்தும் மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.

இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக மலேசியாவிலுள்ள மல்டிமீடியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையின் பேராசிரியர் சரவணன்முத்தையா கலந்து கொண்டு, கணினிப்பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப வளர்சிகளையும், புதிய மென்பொருட்களின் பயன்பாட்டினையும் செயற்கை நுண்ணறிவுப் பெற்ற இயந்திரங்களை உருவாக்கும் முறையையும் அதன் தேவைகளையும் விரிவாக விளக்கினார்.

இந்த கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன. சிறந்த கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு, விவாதம் மற்றும் கலந்துரையாடல் நடத்தினார்கள். கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர்கள் சுதாகர் கருத்தரங்கின் நோக்கங்களை எடுத்துரைத்தார். முனைவர் பிரபாகரன் நன்றி கூறினார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் சமத்துவ பயிற்சி பட்டறை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Gender Equality Workshop at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பாலியல் சமத்துவத்தைப் பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக மக்களியல் துறையில் நடைபெற்றது. மக்களியல் துறை உதவிப் பேராசிரியர் க. மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கலைப்புல தலைவர் விஜயராணி தலைமை தாங்கிப் பேசினார். துறைத் தலைவர் ரவிசங்கர் பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினர் பேராசிரியர் அரங்க பாரி, ராஜீவ்காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் வசந்தி ராஜேந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ - மாணவியர்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ - மாணவியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மக்களியல் துறை இணைப் பேராசிரியர் பீமலதா தேவி நன்றியுரை வழங்கினார்.

Next Story

‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் மாநாட்டிற்கான பொது அழைப்பு (படங்கள்)

Published on 06/03/2024 | Edited on 06/03/2024

 

‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் 13-வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு வரும் ஜூன் மாதம் 7,8,9 நாட்களில் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெறுகிறது. ‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் ‘தி ரைஸ் டாவோஸ்’ மாநாட்டில் பங்கேற்றுப் பயன்பெற விரும்புவோர் www.tamilrise.org என்ற இணைய தளம் வழியாகவோ, +91 9150060032, +91 9150060035 எண்களுக்குத் தொடர்பு கொண்டோ பதிவு செய்யலாம். இம்மாதம் 31-ம் தேதிக்குள் பதிவு செய்பவர்களுக்கு 30% பதிவுக் கட்டணச் சலுகை தரப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. டாவோஸ் மாநாட்டிற்கான பொது அழைப்பு இன்று (06-03-24) வெளியிடப்பட்டது. இச்சந்திப்பில் 'தி ரைஸ்' அமைப்பின் நிறுவனர் தமிழ்ப் பணி ம. ஜெகத் கஸ்பர், அனைத்துலகத் தமிழ்ப் பொறியாளர் பேரவைத் தலைவர் திரு. கிருஷ்ணா ஜெகன், உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.