International Certificate for Erode Engineering College...!

Advertisment

ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை தேசிய மதிப்பீட்டுக் குழு அதிகாரிகளான ஆர்.டி ஷர்மா, (முன்னாள் துணைவேந்தர், நொய்டா சர்வதேச பல்கலைக்கழகம், உத்திரபிரதேசம்), வி.திவாகர் ரெட்டி, (புலமுதல்வர், ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், திருப்பதி) மற்றும். பாரத் சௌத்ரி, (புலமுதல்வர், மஹாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகம், புனே) ஆகியோர் கடந்த ஜூலை மாதம் 13,14,15 ஆகிய மூன்று நாட்கள் கல்லூரியை கீழ்க்கண்ட அளவுகோல் வாயிலாக பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்தனர்.

பாடத்திட்டம், கற்பித்தல், கற்றல் முறைகள், ஆராய்ச்சிகள், புதுமை, கண்டுபிடிப்புகள் மற்றும் விரிவாக்கம், கல்லூரி உள்கட்டமைப்பு, நூலகம் சார்ந்த வசதிகள், மாணவர்களின்; முன்னேற்றம், ஆளுமை, தலைமைத்துவம் மற்றும் ஒருங்கிணைப்பு, கல்லூரியின் மேலாண்மைத் திறன் ஆகியவற்றை மதிப்பீடு செய்து சிறப்பாக கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகின்ற காரணத்திற்காக தரச்சான்றிற்கு பரிந்துரைச் செய்தனர்.

தரமதிப்பீட்டுக் குழு அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுத்ததற்காகவும், முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் வாயிலாக ஆதரவுடன் சிறப்பாக செயல்பட்டு வருவதையும், குறைந்த கல்விக் கட்டணத்தில் அதிக சேவை செய்தமைக்காகவும், கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மற்றும் தேர்ச்சி விகிதத்திலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு தமிழக அளவில் தலைசிறந்த 50 கல்லூரிகளில் ஒன்றாக திகழ்வதையும் பாராட்டினர்.

Advertisment

மேற்கண்ட சிறப்பம்சங்களால் கல்லூரி தேசிய மதிப்பீட்டு கழகத்தின் (நாக்) ‘ஏ பிளஸ்” கிரேடு 3.33 (அவுட் ஆஃப் 4) மதிப்பெண்கள் பெற்றுள்ளது. கல்லூரி வளாகத்தில் நடந்த பாராட்டு விழாவில் நாக் “ஏ பிளஸ்” அங்கீகாரச் சான்றிதழை கல்லூரி தலைவர் எஸ்.எஸ்.கந்தசாமி, செயலாளர் எஸ்.டி.சந்திரசேகர், எம்.யுவராஜா ஆகியோர் கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.ஜெயராமனிடம் வழங்கினர்.

விழாவில் ஐகியூஏசி ஒருங்கிணைப்பாளரான டாக்டர்.ஆர்.குமாரவேலன், புலமுதல்வர் பி.ஜெயசந்தர், நிர்வாக மேலாளர் என்.பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.