Advertisment

சர்வதேச ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்! திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு! 

International Autism Day! Pledge accepted at Trichy Collector's Office!

Advertisment

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சர்தேச ஆட்டிசம்விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சர்வதேச ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் ஆட்டிசகுழந்தைகளின் வாழ்வின் தரத்தையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த இயன்ற முயற்சிகளை செய்வோம் என்ற உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

International Autism Day! Pledge accepted at Trichy Collector's Office!

Advertisment

இதனைத் தொடர்ந்து ஆட்டிசம் குழந்தைகள் வாழ்வின் அடையாள குறியீட்டை வலியுறுத்தும் நிறமான நீல நிற பலூன்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பறக்கவிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.சந்திரமோகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் எஸ்.சாந்தகுமார் மற்றும் இந்திய குழந்தைகள் நல குழுமத்தினர், சிறப்புப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள், சிறப்பாசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe