Advertisment

பொறியியல் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு மசோதா... சட்டமன்றத்தில் நாளை தாக்கலாகிறது

Internal quota for government school students in engineering courses ...

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. நாள்தோறும் பல்வேறு துறையைச் சார்ந்த மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்த அமைச்சர்கள் விளக்கம் அளித்துவருகின்றனர். அத்துடன், புதிய அறிவிப்புகளையும் அமைச்சர்கள் வெளியிட்டுவருகின்றனர்.

Advertisment

Internal quota for government school students in engineering courses ...

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கானரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புகளில் சேர கட்டணம் செலுத்தியவர்களுக்கான ரேண்டம் எண்ணைwww.tneaonline.orgஎன்ற இணையதளத்தில் காணலாம் என இன்று அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், நாளை சட்டமன்றத்தில், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டு பொறியியல் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களின் முன்னுரிமைக்கான சட்டமுன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நாளை தாக்கல் செய்ய இருக்கிறார்.

Advertisment

education Engineering Ponmudi TNGovernment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe