Internal party competition... DMK councilor attacked by party members

கள்ளக்குறிச்சியில் உட்கட்சி தேர்தல் காரணமாக திமுக கவுன்சிலர்களே இருதரப்புகளாக மோதிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ வசந்தன் கார்த்திகேயனும், முன்னாள் எம்.எல்.ஏ மூக்கப்பன் என்பவரும் மனுதாக்கல் செய்துள்ளனர். இதன்காரணமாக கள்ளக்குறிச்சி நகராட்சி திமுக கவுன்சிலர்கள் இருவருக்கு இடையே ஏற்கனவே தகராறு இருந்துள்ளது. இதனிடையே கள்ளக்குறிச்சி நகர்மன்ற கூட்டம் நடந்துமுடிந்து வெளியே வந்தபொழுது 17 வார்டு கவுன்சிலர் ஞானவேலுவிற்கும், 5 ஆவது வார்டு கவுன்சிலர் யுவராணி ராஜாவிற்கு இடையே வாக்குவதம் ஏற்பட்டது. அப்பொழுது யுவராணி ராஜாவின் ஆதரவாளர்கள் ஞானவேலுவை கடுமையாக தாக்கினர். தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.