சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து ஆறு நாட்களாக உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு வார்த்தைக்கு அழைத்த போதிலும் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து தொடர்ச்சியாகப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
போராட்டத்தின் போது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத்தெரிவித்தனர்.
இந்நிலையில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக முதல்வர் உறுதி அளித்ததைத்தொடர்ந்து தங்களுடைய போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.