Advertisment

ஜி.ராமகிருஷ்ணன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை 

ra

Advertisment

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் மாணவி அனிதா மரணத்திற்கு நியாயம் கேட்டும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிந்தாதிரிப் பேட்டை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் மீது சிந்தாரிபேட்டை காவல் நிலையம் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisment

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜி.ராமகிருஷ்ணன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி பி.என். பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஜி.ராமகிருஷ்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி, ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காவல்துறையை தாக்கியதாகவும், சட்ட விரோதமாக கூடியதாகவும் பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளதாக வாதிட்டார்.

இதனை ஏற்ற நீதிபதி, எழும்பூர் நீதிமன்றத்தில் ஜி.ராமகிருஷ்ணன் மீதான வழக்கு விசாரனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

g.ramakrishnan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe