interim budget deputy cm of tamilnadu

தமிழக இடைக்கால பட்ஜெட் இன்று (23.02.2021) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

Advertisment

சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று (23/02/2021) காலை 11.00 மணிக்கு கூடும் சட்டப்பேரவையில், தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 15வது சட்டப்பேரவையின் கடைசிக் கூட்டத்தொடர் என்பதால் பல்வேறு அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. அதேபோல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால் வாக்காளர்களைக் கவர பல்வேறு திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Advertisment

தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 11ஆவது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.