interesting incident happened wedding chairman's daughter in Sivagangai district

Advertisment

‘சேர்மன் பொண்ணுஎங்களுக்கும் பொண்ணுதான்...’ என சேர்மனின் மகளுக்காக 5 கிராம மக்கள் ஒன்று கூடி செய்துள்ள சம்பவம்அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதிக்கு அருகே உள்ள குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்மணி பாஸ்கரன். இவர், சிவகங்கை மாவட்ட ஊராட்சி குழு தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், பொன்மணி பாஸ்கரனின் மகளான ஹரி பிரியா என்பவருக்கும்ஜெயக்குமார் என்பவருக்கும் கடந்த வாரம் சென்னையில் திருமணம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக, மணமகள் குடும்பத்தினர் சார்பாகமணமக்களுக்குசீர் வரிசை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்காக மணப்பட்டி, முத்தம்பட்டி உள்ளிட்ட 5 கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்துடன் கணக்கில் பழங்கள், பித்தளை பாத்திரங்கள், குத்து விளக்கு மற்றும் 500 கிடாவுடன் மணமகன் வீட்டிற்கு நடையைக் கட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, 350 சீர் வரிசை தட்டுக்களுடன் ஊர்வலமாக வந்த பெண்கள்., மேள தாளங்களோடு மணமகள் ஹரி பிரியாவுக்கு சீர் வரிசை செய்துள்ளனர்.

Advertisment

அப்போது, சீர் வரிசை செய்ய வந்த கிராம மக்களை மணமக்கள் வீட்டார் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதுபோல் திருமணங்களில் உறவினர்கள் சீர் வரிசை கொண்டு வருவது வழக்கம். அதே சமயம்,நகரப் பகுதிகளில் தங்களால் முடிந்த பரிசுப் பொருட்களையும் பணத்தையும் மொய்யாக எழுதுவதைத்தான் பார்த்துள்ளோம். ஆனால், ஜாதி மதங்களை கடந்து5 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மணமக்களுக்கு சீர் செய்த சம்பவம்அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.