Advertisment

“அக்கா நீங்க பேசுனது போதும்.. மாமாவை பேசச் சொல்லுங்க!”-ராதிகாவுக்கு ஷாக் கொடுத்த பெண்!

 interesting incident happened during the Virudhunagar Radhika Sarathkumar campaign

விருதுநகர் ஒன்றியம் - அய்யனார் நகரில் பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சார வாகனத்தில் இருந்தபடி தேர்தல் பரப்புரை செய்தபோது, கீழே நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென்று “எக்கா.. மாமாவை பேசச் சொல்லு..!” என சவுன்ட் விட்டார்.

Advertisment

 interesting incident happened during the Virudhunagar Radhika Sarathkumar campaign

இதனால் ஷாக்கான ராதிகா பேச்சை நிறுத்திவிட்டு அந்தப் பெண்ணிடம் “ஏன் மாமான்னு சொன்னீங்க?”... எனக் கேட்டார். ‘நடிகையாக இருந்தாலும், இன்னொரு பெண் தன் கணவனை மாமா என்று உரிமை கொண்டாடுவதை ஏற்கமுடியாது’ என்பதுபோல் ராதிகா நடந்து கொள்ள, சுதாரித்துக் கொண்ட அந்தப் பெண் “நீங்க எனக்கு அக்கா. அக்காவுக்கு மாமான்னா.. எனக்கும் மாமாதானே!’ எனச் சொல்லிவிட்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்தார். மாமா உரிமை கொண்டாடும் பெண்ணின் வேண்டுகோளை வேறுவழியின்றி ஏற்ற சரத்குமார், பிரச்சார வாகனத்தில் தானும் ஏறி சிறிதுநேரம் பரப்புரை செய்தார்.

Advertisment
sarathkumar rathika
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe