Advertisment

“விருப்பம் உள்ள இளைஞர்கள் நேரில் வந்து பயன்பெறவும்” - மாவட்ட ஆட்சியர்!

publive-image

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமையன்று (26.11.2021) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்குப் பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன. இந்த முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ (All Trades), டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு (B.E. Also) முடித்த அனைவரும் (வயது வரம்பு: 18க்கு மேல் 35க்குள்) கலந்துகொள்ளலாம்.

Advertisment

மேற்படி நேர்காணலில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல், சுயவிபரக்குறிப்பு (Resume) மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் 26.11.2021 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகைபுரிந்து பயன்பெறுமாறு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Advertisment

District Collector trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe