சென்னை ஐஸ்கவுஸ் பகுதியை சேர்ந்தவர் அல்போன்ஸ்மேரி (42). இட்லி மாவு வியாபாரியான இவர், வட்டித் தொழிலும் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 15-ந் தேதி அல்போன்ஸ்மேரி திடீரென மாயமானார். இதுதொடர்பாக அவரது கணவர் இருதயநாதன், ஐஸ்கவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கிணற்றில் அல்போன்ஸ் மேரியின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chennai 71.jpg)
இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், 2 தம்பதிகள் அந்த பெண்ணை கொலை செய்து, சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி ஆட்டோவில் கொண்டுபோய் கிணற்றில் வீசியது தெரியவந்திருக்கிறது. ராயப்பேட்டையை சேர்ந்த வள்ளி, தேவி ஆகியோர் அல்போன்ஸ்மேரியிடம் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளனர். குறித்த காலத்தில் திருப்பி செலுத்தவில்லை என்பதால், வட்டிப்பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது.
இதனால், 15-ந் தேதி தனது வீட்டிற்கு அல்போன்ஸ்மேரியை வரவழைத்த தேவியும், அவரது கணவர் மணியும் சேர்ந்து அவரை அடித்து கொலை செய்துள்ளனர். இந்தகொலைக்கு வள்ளி அவரது கணவர் சுரேஷ் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதையடுத்து, அன்போன்ஸ் மேரியின் சடலத்தை ஆட்டோவில் எடுத்து சென்று மதுராந்தகத்தில் உள்ள கிணற்றில் வீசியுள்ளனர். இப்போது 4 பேரையும் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us