Advertisment

சிறைச்சாலைகளில் இண்டர்காம் போன் வசதி

Intercom phone facility in Madurai Central Jail

Advertisment

சிறைக்கைதிகளைச்சந்திக்க வரும் அவரது உறவினர்கள், அவர்களிடம் பேசுவதைப் போல ஒரு கொடுமையை வேறு எங்கும் பார்க்க முடியாது. ஏனென்றால், ஒரே நேரத்தில் பல கைதிகள்தங்களின் உறவினர்களிடம் பேசுவார்கள். அந்த சத்தத்தில்ஒருவர் பேசுவது மற்றொருவருக்குக் கேட்பதே மிகக் கடினமாக இருக்கும். ஆனாலும், அதைத்தவிர வேறுவழியில்லை என்பதால்ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டு சத்தமாகப் பேசுவார்கள். அதுமட்டுமல்லாமல்கைதிகள் என்ன பேசுகிறார்கள் என்பதை அறியஉளவுத்துறையும் படாதபாடு படும்எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மதுரை மத்திய சிறையில்தற்போது 2000-க்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகளும்விசாரணைக் கைதிகளும் இருக்கின்றனர். கைதிகளை சந்திக்க வரும் உறவினர்கள்மனு அடிப்படையில் தான் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால்அந்த முறையை மாற்றுவதற்காக மதுரை மத்திய சிறையில் இண்டர்காம் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிறையில் இருக்கும் கைதிகளுக்குஎந்தவித தொந்தரவும் இன்றிஅவர்களது உறவினர்களிடம் பேசுவதற்காகஇண்டர்காம் தொலைபேசி வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 70,000 ஆயிரம் ரூபாய் செலவில் 15-க்கும் மேற்பட்ட இண்டர்காம் தொலைப்பேசிகள், கண்ணாடி தடுப்பு அறைகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு முற்றிலும் நவீனமாக மாற்றப்பட்டுள்ளது.

Advertisment

இதுவரை வேலூர், புழல் மற்றும் கோயம்புத்தூர் மத்திய சிறைகளில் மட்டுமே இண்டர்காம் தொலைப்பேசி வசதி இருந்து வந்தது. ஆனால் தற்போது மதுரை மத்திய சிறையிலும்இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேர்காணல் அறையை மதுரை சரக துணைத் தலைவர் பழனி திறந்து வைத்தார்.

இந்த திட்டம் குறித்துசிறைத்துறை அதிகாரிகள் பேசும்போது ''தனிநபர் உரிமையின் அடிப்படையில்கைதிகள் பேசும் பேச்சுக்கள்ரெக்கார்டு செய்யப்படாது'' எனத்தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

police jail madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe