Advertisment

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கல்லூரிகளுக்கு இடையேயான இருபாலர் கபடி போட்டிகள்!

Intercollegiate kabaddi competition at Annamalai University

அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வித்துறை உள்விளையாட்டு அரங்கில் பல்கலைக்கழக இணைவு கல்லூரிகளுக்கு இடையேயான கபடி விளையாட்டு போட்டிகள் காட்டுமன்னார்கோயில் அரசு கல்லூரி ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது. இதில் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்ற போட்டிகளுக்கான துவக்க விழா நடைபெற்றது.

Advertisment

அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி துறை இணை இயக்குநர் வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார். போட்டிகளின் ஒருங்கிணைப்பாளரும் காட்டுமன்னார்கோவில் அரசு கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் சரவணன் வரவேற்றார். அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்தார்.

Advertisment

நிகழ்ச்சியில் துறைத் தலைவர்கள் சிற்றரசு, நடராஜன், ஏ டிவிஷன் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜமாணிக்கம், இளவரசி உதவி பேராசிரியர் சேவி, தொழில்நுட்ப கல்லூரி உடற்கல்வி இயக்குநர் முருகேசன், உடற்கல்வி இயக்குநர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் வெள்ளிக்கிழமை 20 கல்லூரிகளுக்குகிடைய ஆண்கள் கபடி விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

kabadi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe