
ஈரோடு சத்தியமங்கலம் வனப்பகுதியில் மைசூரிலிருந்து வரும்லாரிகளை காட்டுயானைகள்உணவுக்காக வழிமறிப்பதுஅடிக்கடி நடக்கும் நிகழ்வாகும். குறிப்பாகக் கரும்பு ஏற்றிச்செல்லும் லாரிகளையானைகள் சூழ்ந்து கரும்புகளைச் சாப்பிடுவது வழக்கமானஒன்றே. ஆனால் இந்த சம்பவங்கள் இரவு நேரங்களில் மட்டுமே நடைபெறும். ஆனால் தற்பொழுது பட்டப்பகலிலேயே கரும்பு லாரிகளையானைகள் சூழ்ந்து வரும்நிலை ஏற்பட்டுள்ளதாகத்தெரிவித்துள்ள வாகன ஓட்டிகள். இதனால் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுவதாகத்தெரிவித்துள்ளனர்.
இன்று ஈரோடு சத்தியமங்கலம் பகுதி காரப்பள்ளம்சோதனை சாவடியில் இரண்டு காட்டு யானைகள் குட்டிகளுடன் சாலையில் சிதறிய கரும்புத் துண்டுகளைச் சாப்பிட்டதோடு, அந்த வழியே வரும் லாரிகளை இடைமறித்துச் சூழ்ந்துகொண்டது. இதனால் அங்குப் போக்குவரத்துக்குப் பாதிக்கப்பட்டது.
Follow Us