ஈரோடு சத்தியமங்கலம் வனப்பகுதியில் மைசூரிலிருந்து வரும்லாரிகளைக் காட்டுயானைகள்உணவுக்காக வழிமறிப்பதுஅடிக்கடி நடக்கும் நிகழ்வாகும். குறிப்பாகக் கரும்பு ஏற்றிச்செல்லும் லாரிகளையானைகள் சூழ்ந்து கரும்புகளைச் சாப்பிடுவது வழக்கமானஒன்றே. ஆனால், இந்த சம்பவங்கள் இரவு நேரங்களில் மட்டுமே நடைபெறும். ஆனால் தற்போது பட்டப்பகலிலேயே கரும்பு லாரிகளையானைகள் சூழ்ந்துவரும்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தாளவாடி மலைப்பகுதியில் கரும்பு அறுவடை காலம் துவங்கியுள்ளது. இதனால் கரும்பு ஏற்றிவரும் லாரிகளைக் குறிவைத்துகாட்டுயானைகள் இடைமறிக்கும் நிகழ்வுகள் அதிகரித்துவருகிறது.
இன்று (23.09.2021) தாளவாடி மலையிலிருந்து சத்தியமங்கலம் செல்வதற்காக கரும்பு ஏற்றிக்கொண்டுஆசனூர் அருகே சென்றுகொண்டிருந்த லாரியை குட்டியுடன் காட்டுயானைஒன்று வழிமறித்தது. இதனால் லாரியை நிறுத்தியஓட்டுநர், என்ன செய்வதென்று திகைத்தநிலையில், கரும்பு ஏற்றப்பட்டுள்ள பகுதிக்குச் சென்ற ஓட்டுநர், மேலிருந்த சில கரும்பு துண்டுகளைசாலையின் ஓரத்தில் போட்டுள்ளார். அந்தக் கரும்புத் துண்டுகளைஎடுக்க யானை நகர்ந்ததால், உனடடியாகலாரிஅங்கிருந்து கிளம்பியது. தொடர்ந்துபின்னேநின்றுகொண்டிருந்தவாகனங்களும் சென்றன.