Advertisment
உடல்நலக் குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில நாட்களாக தொடர் சிகிச்சையில் இருந்த அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளது. உடல் நிலை குறித்த முறையான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.