வாடிவாசலில் மயங்கி விழுந்த முன்னாள் அமைச்சரின் காளைக்கு தீவிர சிகிச்சை

nn

புதுக்கோட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை வாடிவாசல் பகுதியில் மயங்கி விழுந்த நிலையில் தற்போது ஜல்லிக்கட்டு காளைக்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இதில்நூறுக்கும் மேற்பட்டகாளைகள் கலந்துகொண்டன. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வளர்ப்பு காளையான சின்ன கொம்பன் களையும் போட்டிக்காக கொண்டுவரப்பட்டிருந்தது. அப்பொழுது பாய்ச்சலுக்கு தயாராக இருந்த சின்ன கொம்பன் வாடிவாசலுக்கு கொண்டுவரப்பட்டபோது மயங்கி கீழே விழுந்தது. உடனடியாக கால்நடை மருத்துவர்கள் சின்னக் கொம்பன் காளைக்கு சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து காளையானது டாட்டா ஏசி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

admk jallikattu Pudukottai vijayabaskar
இதையும் படியுங்கள்
Subscribe