
நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை,கொள்ளை வழக்கில் விசாரணையானது மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது.கொடநாடு கொலை வழக்கில் ஏற்கனவே காவல் உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டநிலையில் இதில் மேலும் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனால்இந்த வழக்கில் மொத்தம் ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனிப்படையின் ஒரு குழுவைச் சேர்ந்த 3 போலீசார் சம்பவம் நிகழ்ந்த கொடநாடு எஸ்டேட் பகுதியில்8,9,10 ஆகிய எண் கொண்ட நுழைவு வாயில்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தனிப்படை குழுவினருடன் எஸ்டேட் மேலாளர் நடராஜனும்உள்ளார்.நேற்று கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான மேல் விசாரணைக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒருமாதகால அவகாசம் வழங்கியநிலையில் போலீசார் இந்த வழக்கின் விசாரணையைத்தீவிரமாகக் கையிலெடுத்துள்ளனர்.
இதற்காக நேற்றைய தினமே உதகை பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி சுதாகர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்நடைபெற்றது. கனகராஜின்உறவினர்களிடம் காவல் ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலானபோலீசார் தற்போதுவிசாரித்து வருகின்றனர். மற்றொரு குழுவினர் சம்பவம் நடந்த கொடநாடு பங்களாவில் நேரில் சென்று சோதனையிட்டுவிசாரித்து வருகின்றனர்.இப்படி பலகோணங்களில்போலீசார் விசாரணையைத்தீவிரப்படுத்தியுள்ளனர்.
Follow Us