திருச்சி ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்களில் உள்ள பயணிகளின் உடைமைகள் மற்றும் ரயில் பெட்டிகள் முழுவதும் ரயில்வே பாதுகாப்புப் படை காவலர்கள் தலைமையில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நிபுணர்களைக் கொண்டு சோதனை செய்யப்பட்டது.
நேற்று மாலை 6.30 மணியளவில் திருச்சி ரயில்வே சந்திப்பிற்கு வந்த வைகை எக்ஸ்பிரஸ், அதனைத்தொடர்ந்து வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் வெடிகுண்டு நிபுணர்கள் ராக்கி என்ற மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். எப்பொழுதும் மேற்கொள்ளப்படும் சோதனைகளைக் காட்டிலும் கூடுதலான சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், சுதந்திர தினத்தையொட்டி எந்த ஒரு அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்பதனால் அனைத்து ரயில்களிலும் சோதனையைத் தீவிரப்படுத்தி உள்ளதாக ரயில்வே பாதுகாப்புப்படை காவலர்கள் தெரிவித்தனர்.