மாண்டஸின் தீவிரம்; சென்னை கடற்கரை குடியிருப்புகளில் புகுந்த கடல் நீர்

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 'மாண்டஸ்' எனும் புயலாக வலுவடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தீவிரப்புயலான 'மாண்டஸ்' சென்னையில் இருந்து தென்கிழக்கில் 220 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. சென்னையை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பட்டினப்பாக்கம், மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில், கடல் சீற்றம் அதிகரித்ததால் பட்டினப்பாக்கம் கடற்கரையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் கடல் நீர் உள் புகுந்துள்ளது.

Chennai Mandous Cyclone
இதையும் படியுங்கள்
Subscribe