Intensification of jallikattu works in Madurai Avanyapuram ..!

Advertisment

மதுரை அவனியாபுரத்தில் தைத் திருநாளன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக, வாடிவாசல் மற்றும் பேரிகார்டு அமைக்கும் பணிகளுக்காக கம்புகள் நடப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரத்தில் பொங்கல் தைத் திருநாளன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துவருகிறது.

இதற்காக அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில், வாடிவாசல் அமைப்பதற்காக தென்னை தூண்கள் நடப்பட்டது. மேலும்,பார்வையாளர்களுக்கான பேரிகார்டு பணிகளுக்காக சவுக்கு கம்புகள் நடப்பட்டு வருகிறது.

Advertisment

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் மாடுபிடி வீரர்களுக்கு நாளை அவனியாபுரம் அரசு ஆரம்பப் பள்ளியில் மருத்துவப் பரிசோதனை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.